உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி சாம்பியன் | Coimbatore | Badminton Tournament

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணி சாம்பியன் | Coimbatore | Badminton Tournament

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் சார்பில், மண்டல அளவிலான மாணவர்களுக்கான பூப்பந்து போட்டி பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்றது. போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. கல்லுாரி ஆயத்த ஆடை துறை தலைவர் சந்திரசேகரன் போட்டிகளை துவக்கி வைத்தார். இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லுாரி அணி 35-22, 35-28 என 2-0 என்ற செட் கணக்கில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியும், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் 37-34, 33-35, 35-32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி முன்னிலை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் கிரிராஜ், நடுவர்கள் ரகுபதி, முரளி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை