வேடந்தாங்கல் ஆகுமா, கோவை அக்ரஹார சாமக்குளம்...
கோவையை அடுத்த அன்னுார் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளத்தில் தண்ணீர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தேங்கி நிற்கிறது. இதனால் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பறவைகள் ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து அதிக அளவில் இங்கு வந்துள்ளன. அக்ரஹார சாமக்குளத்தில் உள்ள தண்ணீர் மாசுபடாதது. இதனால் வலசை பறவைகள் அதிக அளவில் இங்கு வருவதாகவும், குளத்தில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காகவும் இங்கு வருவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். பறவைகளுக்கு சிறந்த புகலிடமாக உள்ள அக்ரஹார சாமக்குளம் பறவைகளின் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.
நவ 21, 2024