குண்டு வீச திட்டமிட்ட ஐந்து பேர் கைது |Coimbatore |Bomb attempt at BJP executive's house
கோவை செல்வபுரம் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் சென்ற நபரை சோதனை செய்தனர். அவரது பைக்கில் 2 பெட்ரோல் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் செல்வபுரம் சிவாலயா பகுதியை சேர்ந்த நாசர் என தெரியவந்தது. இவர் பாஜ தெற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்றது விசாரணையில் அம்பலமானது. தொடர் விசாரணையில் நாசருடைய அண்ணன் மணிகண்டனின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வேலை பார்த்தார். அங்கு வந்த நாசர் செலவுக்கு 5 ஆயிரம் ரூபாய் கடன் தரும்படி மணிகண்டனிடம் கேட்டார். அவர் மறுத்தார். ஆத்திரம் அடைந்த நாசர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு கடன் தர மணிகண்டனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்து பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்தது தெரியவந்தது. நாசருக்கு பெட்ரோல் வெடிகுண்டு வீச திட்டம் தீட்டியதாக கரும்புக்கடையைச் சேர்ந்த ஃபைசல் ரகுமான், ஜாகிர் உசேன், அண்ணா காலனியைச் சேர்ந்த இதயத்துல்லா, ஆசாத் நகரை சேர்ந்த முகமது ஹர்ஷத் மற்றும் நாசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.