உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது துயரம் | Bus Accident | 4 Death | Munnar | Kerala

ஆன்மிக சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது துயரம் | Bus Accident | 4 Death | Munnar | Kerala

கேரளாவில் அரசு போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதை நிவர்த்தி செய்யும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு பஸ் டிப்போக்களில் இருந்தும் சுற்றுலா பகுதிகளுக்கு பேக்கேஜ் அடிப்படையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாவேலிக்கரையில் இருந்து பட்ஜெட் டூரிசம் பேக்கேஜ் என்ற பெயரில் கொட்டாரக்கரை டிப்போவை சேர்ந்த கேரள அரசு பஸ்சில் தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு 36 பேர் கொண்ட குழு ஆன்மீக சுற்றுலா சென்றனர். அங்கிருந்து திரும்புகையில் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே குட்டிக்கானம் பகுதியில் பஸ் வந்தபோது இன்று காலை 6 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் ரமா மோகன், வயது 55, அருண் ஹரி, வயது 40, சங்கீத், வயது 45 மற்றும் பிந்து உன்னித்தான், வயது 55, ஆகியோர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். பலத்த காயம் அடைந்தவர்களில் டிரைவர் உள்பட 32 பேர் முண்டக்கயம் தனியார் மருத்துவமனையிலும், பாலாவில் தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை