உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி சார்பில் தெருவுக்கு தெரு CCTV கேமிராக்கள் பொருத்தம் | Coimbatore | CCTV camera installed

ஊராட்சி சார்பில் தெருவுக்கு தெரு CCTV கேமிராக்கள் பொருத்தம் | Coimbatore | CCTV camera installed

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்தில் கடந்த நவம்பர் 29ம் தேதி தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். சிசிடிவி கேமிராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. போலீசார் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவது அவசியம் என வலியுறுத்தினர். அதன் ஒரு பகுதியாக பல்லடம் செம்மிபாளையம் ஊராட்சி சார்பில் 14 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு செம்மிபாளையம், குப்புசாமி நாயுடு புரம், ஊர் எல்லை என அனைத்து பகுதிகளிலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 91 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டன. கேமிராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை ஏஎஸ்பி சுரேஷ் திறந்து வைத்தார். செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா, காங்கிரஸ் வட்டார தலைவர் புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை