உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாறிவரும் உணவு பழக்கம்; பாரம்பரியத்திற்கு மாறுங்கள்

மாறிவரும் உணவு பழக்கம்; பாரம்பரியத்திற்கு மாறுங்கள்

நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தில் உணவகம் நடத்துபவர் கல்கி கவியரசு.மை ரெஸ்டாரன்ட் குரு அமைப்பு சார்பில், 2022ம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளுக்கான உணவக விருதை இவர் பெற்றார். சென்னையில் நடந்த, எண்ணித் துணிக கலந்துரையாடலில் கவர்னர் ரவி, 120 பேரை கவுரவித்ததில், இவரும் ஒருவர். ஆரோக்கிய வாழ்வுக்கு நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகள் குறித்து கல்கி கவியரசு கூறியதாவது : -----இயற்கையில் விளையும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவாக எடுத்து கொண்ட, ஆறறிவு படைத்த மனிதன் இறைச்சியை ருசி கண்டதால், காடுகளில், வன விலங்குகளை வேட்டையாடல் துவங்கியது. குறிப்பாக, வயிற்றை நிரப்ப மட்டும் உணவை எடுத்து கொள்ளாமல், வைட்டமின், புரோட்டின், புரதம் கலந்த சரிவிகித உணவு கலவை அவசியம். ஊட்டச்சத்து உணவை உட்கொண்ட நமது மூதாதையர்கள் 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தொடர்ந்து 80 வயது வரை என குறைந்தது ஆயுட்காலம். தற்போதைய தலைமுறையினர் 50 வயதை தாண்டுவதற்கு மருந்துகளையும், மருத்துவமனைகளுக்கு நாடி செல்ல வேண்டியுள்ளது. காய்கறிகளை வெட்டி வேக வைப்பது; வெங்காயம் உரிப்பது போன்றவற்றிற்கு நேரம் இல்லை என்ற சோம்பேறிதனத்தையும் மூலதனமாக எடுத்து கொண்ட நிறைய நிறுவனங்கள், பல் பொருள் அங்காடி மற்றும் ஆடம்பர மால்களில் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை காற்று புகாத பிரிட்ஜ்களில் அடைத்து வைத்து விற்பனை செய்கிறது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நம் நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முப்படை அதிகாரிகளும், குடும்பத்தினரும் ஆரோக்கியத்திற்கு தனிகவனம் செலுத்துகின்றனர். அழகாகவும், பகட்டாகவும் இருக்கும் உணவால் வயிறு நிறைந்துவிடும்; ஆனால் ஆயுள் சுருங்கிவிடும் என்று கல்கி கவியரசு கூறுகிறார். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை