தள்ளுவண்டி மாமூல் வசூலுக்கு ஏஜென்டு போலீசு | வியாபாரிகளை மிரட்டி கவுன்சிலர் கணவர் 'ரவுசு'
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு எப்படி செயல்படனும் என்று மாஜி பக்கா பிளான் போடுவதை பார்த்து துள்ளி குதிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள். இலைக்கட்சியின் வேகத்தை பார்த்து மிரளும் ஆளும் கட்சி உடன்பிறப்புகள். தேர்தலில் போட்டியிட சீட்டுக்கு முட்டி மோதும் ஆளும் கட்சி புள்ளிகள். தள்ளுவண்டி கடைகளுக்கு ரேட் பேசும் ஆளுங்கட்சி லேடி கவுன்சிலரின் கணவர். கார்ப்பரேஷன் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியிலும் சூட்சுமம். சனிக்கிழமையில யாராச்சும் பெட்டி எடுத்துக்கிட்டு வந்தா காலை ஒடிச்சுடுவேன் என்று வார்னிங் கொடுத்த அதிகாரி. மாசந்தோறும் கப்பம் கட்டும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள். எஸ்.ஐ., கண்ட்ரோலில் ஸ்டேஷன் என கோவையில் பல்வேறு துறைகளில் நிலவும் அவலங்கள் குறித்து சித்ரா-மித்ராவின் கல கல கலந்துரையாடல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.