கோவை மக்களை குஷிப்படுத்திய சர்வதேச கிளவுன் காட்சி
கோவை சத்தி சாலையில் உள்ள புரோசான் மால், ஒவ்வொரு பண்டிகையின் போதும், ஏதாவது ஒரு புதுமையான நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி பொங்கலை முன்னிட்டு, தினமலர் நாளிதழ். சந்திரமரி பப்ளிக் ஸ்கூல் இணைந்து 2 நாள் நடன, நாட்டிய, மேஜிக் ஷோ சர்வதேச கிளவுன் காட்சியை நடத்தின. இதில், பெரு, இங்கிலாந்து, கனடா, இந்திய நாட்டு கலைஞர்கள் பங்கேற்றனர். குழந்தைகள் ரசிக்கும் வகையில், பந்து விளையாட்டு. தட்டு விளையாட்டு, நடனங்கள், பாடல்கள், அக்ரோபேட் போன்ற நிகழ்வுகள் நடந்தன. இந்த நிகழ்வை பெற்றோர், குழந்தைகள் அதிகம் பேர் ரசித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் நிகழ்வின் இறுதியில் நடனமாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இரண்டு மணி நேரம் நடந்தாலும் இரண்டே நிமிடங்களில் முடிந்தது போன்ற உணர்வு இருந்ததாக பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.