/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பிறவி பாத குறைபாடு அறுவை சிகிச்சை இல்லாமல் அரசு மருத்துவமனையில் தீர்வு
பிறவி பாத குறைபாடு அறுவை சிகிச்சை இல்லாமல் அரசு மருத்துவமனையில் தீர்வு
குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளில் ஒன்று பாத குறைபாடு. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாத குறைபாடு தான் அதிக அளவில் ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் பாதத்தில் குறைபாடு இருந்தால் அதன் தாய் வாயிலாக சரி செய்ய முயற்சி செய்யப்படும். அப்படியும் சரியாகவில்லையென்றால் குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் அவர்களின் தோல் சற்று உறுதியாக இருக்கும். அப்போது மாவு கட்டு போட்டு அந்த குறை சரி செய்யப்படும். குழந்தை நடப்பதற்கு முன்பு இவற்றை சரி செய்ய வேண்டும். குழந்தையின் பாத குறைபாடுகளை சரி செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 30, 2025