பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை | Coimbatore | Orange alert for Coimbatore
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பருவ மழை பெய்து வருகிறது. மாநகர பகுதிகளிலும், புறநகர பகுதிகளிலும் ஆங்காங்கே தொடர் கனமழையும் மிதமான மலையும் பதிவாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. நீர்நிலைகள் மற்றும் நொய்யல் ஆற்றில் அதிகளவு நீர் செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாரும், நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டூரீஸ்டுகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. ரோட்டில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவு கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.