உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தட்டிக் கொடுத்து பாராட்டிய சிறைத்துறை டிஐிபி | Coimbatore |Prisoner Manufactured Solar Auto

தட்டிக் கொடுத்து பாராட்டிய சிறைத்துறை டிஐிபி | Coimbatore |Prisoner Manufactured Solar Auto

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர் யுக ஆதித்தன். இவர் கொலை வழக்கில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். யுக ஆதித்தன் சிறையில் முடங்காமல் தனது திறமையை பயன்படுத்தி புதிதாக சோலார் பவரில் சைக்கிள் தயாரிக்க திட்டமிட்டார். சிறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து சோலார் சைக்கிளை உருவாக்கினார். இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டி அவரை மேலும் ஊக்குவித்தனர். தொடர்ச்சியாக சோலார் ஆட்டோவை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ஆட்டோவில் சூரிய ஒளி உற்பத்திக்கான தகடு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோவில் டிரைவர் சீட்டுக்கு அடியில் இதற்கான பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய மின்சக்தி மூலம் ஒருமுறை பேட்டரி நிரம்பினால் 200 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக பயணிக்கலாம். ஆட்டோ மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. டிரைவர் உட்பட 8 பேர் வரை செல்லலாம். எல்.இ.டி விளக்கு, ஹாரன், ஹேன்ட் பிரேக், டேப் ரிக்கார் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சோலார் ஆட்டோவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐிபி மற்றும் உயர் அதிகாரிகள் யுக ஆதித்தன் தயாரித்துள்ள ஆட்டோவை பார்வையிட்டு அவரை பாராட்டினர். ஆட்டோவை தற்போது சிறை வளாகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை