உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாம்பியன் பட்டம் வென்ற கே.பி.ஆர். மற்றும் கொங்கு அணிகள் | College Sports

சாம்பியன் பட்டம் வென்ற கே.பி.ஆர். மற்றும் கொங்கு அணிகள் | College Sports

சென்டைஸ் சார்பில் 13ம் ஆண்டு சென்டைஸ் தடகளப் போட்டிகள் கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி. கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் திவ்யா மோகனா துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 100 மீட்டர், 400 மீ., 800 மீ., 1500 மீ., நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ரிலே உள்ளிட்ட தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பிரிவில் 56.5 புள்ளிகள் எடுத்து கே.பி.ஆர். இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை 30 புள்ளிகள் எடுத்த குமரகுரு கல்லுாரியும், 28 புள்ளிகள் எடுத்து கொங்கு இன்ஜினீயரிங் அணி மூன்றாமிடமும் பிடித்தன. மாணவியர் பிரிவில் கொங்கு இன்ஜினீயரிங் அணி 74.5 புள்ளிகளுடம் முதலிடம், 32 புள்ளிகள் எடுத்து பண்ணாரி அம்மன் கல்லுாரி இரண்டாமிடம், 22 புள்ளிகள் எடுத்து கே.பி.ஆர். அணி மூன்றாமிடம் பிடித்தன.

பிப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை