உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு | Cricket Match

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு | Cricket Match

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே டி.எஸ்.எஸ்., அண்ட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சக்தி இன்ஜினியரிங் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானங்களில் நடைபெற்றது. இதில் 16 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்றனர். பி.எஸ்.ஜி. கல்லுாரி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மற்றும் ராமகிருஷ்ணா மெட்ரிக் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜெயேந்திர சரஸ்வதி அணி 37.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணிக்காக அரவிந்த் 36 ரன்கள் சேர்த்தார். ராமகிருஷ்ணா அணியின் சிதேஷ் மற்றும் பிரணவ் ஆதித்யா தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். கோப்பையை வெல்ல 107 ரன்கள் என்ற எளிய இல்ககை விரட்டிய ராமகிருஷ்ணா அணியினர் 24.2 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !