உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு | cricket team selection | covai

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு | cricket team selection | covai

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அணியை தேர்ந்தெடுக்க ஆண்டுதோறும் 14, 16, 19 வயது பிரிவுகள் மற்றும் சீனியர் வீரர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு கடந்த 16ம் தேதியும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு கடந்த 20ம் தேதியும் நடந்தன. முதற்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்டமாக தேர்வு போட்டிகள் நடத்தப்படுகிறது. 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான மாவட்ட அணி தேர்வு நவ இந்தியா ராகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டு சுற்றுகள் நடந்த தேர்வில் சுமார் 75 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதிலிருந்து தேர்வு போட்டிகள் நடத்தி அதில் சிறப்பாக செயல்படும் சிறந்த 16 வீரர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.

ஏப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை