ஆளும் கட்சிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைப்பு |Valparai
ஆளும் கட்சிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைப்பு / Valparai / Meeting postponed as DMK councilors themselves protest / கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. திமுக. கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், மகுடீஸ்வரன், அதிமுக கவுன்சிலர் மணிகண்டன், வி.சி. கவுன்சிலர் வீரமணி ஆகியோர் வளர்ச்சி பணிகள் செய்வதிலும், காலை உணவு வழங்கும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு விளக்கம் அளித்த பின் மன்ற கூட்டம் நடத்தலாம் என கூறி கவுன்சிலர்கள் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு திமுக கவுன்சிலர்களும் அமைதியாக இருந்தனர். ஆளும் கட்சிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்ற கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.