கணியூர் சார் பதிவாளர் ஆபீஸ் - விவசாயிகள் முற்றுகை | Bribe | Sub Registrar | DMK Executives | Kaniur
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் ருத்ர தாண்டவம் ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு லஞ்சம் கொடுத்தால் போதுமாம் போலி ஆவணம், ஆள் மாறாட்டம், கோயில் மற்றும் புறம்போக்கு சொத்து எதுவாக இருந்தாலும் பதிவு செய்து விடுவார்களாம். இதற்காக சார் பதிவாளர் தாமோதரன் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் கைகோர்த்து அப்பாவிகளின் சொத்துக்களை அபகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என பலரிடம் புகார் கூறியும் பருப்பு வேகவில்லை. இதனால் பல கோடி ரூபாய் சொத்துக்களை இழந்த அப்பாவிகள் மற்றும் விவசாயிகள் லஞ்சம், உழலுக்கு முடிவு கட்ட துணிந்தனர். இதையடுத்து சார் பதிவாளர் தாமோதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் கணியூர் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் அலுவலகம் முன்பு டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பிரதான ரோட்டில் திரண்ட விவசாயிகள் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார் 25 பெண் விவசாயிகள் உட்பட 140 விவசாயிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.