உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / டில்லி செங்கோட்டையில் நடக்கும் 75வது குடியரசு தின விழாவில் பழங்குடி தம்பதி பங்கேற்பு| Republic Day

டில்லி செங்கோட்டையில் நடக்கும் 75வது குடியரசு தின விழாவில் பழங்குடி தம்பதி பங்கேற்பு| Republic Day

டில்லி செங்கோட்டையில் நடக்கும் 75வது குடியரசு தின விழாவில் பழங்குடி தம்பதி பங்கேற்பு | Republic Day Celebration கோவை மாவட்டம் வால்பாறை காடர் பழங்குடி தம்பதி ராஜலட்சுமி - ஜெயபால். ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்காக ராஜலட்சுமி - ஜெயபால் குரல் கொடுத்து வருகின்றனர். பழங்குடி மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி. தனது கிராமத்தை இந்தியாவில் மிக சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளார். அவருடைய செயலுக்கு பக்கபலமாக இருந்து வழி காட்டி வருபவர் அவரது கணவர் ஜெயபால். இவர்களது செயலை பாராட்டும் விதமாக இருவரும் டில்லி செங்கோட்டையில் நடக்கும் 75வது குடியரசு தின விழாவில் VVIP க்களாக பங்கேற்க தமிழக அரசு தேர்வு செய்தது. வரும் ஜனவரி 22 ம் தேதி விமானம் மூலம் டில்லி செல்லும் தம்பதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிப்ரவரி 2 ம் தேதி தமிழகம் திரும்புகின்றனர். காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் ஆனைமலைத்தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கயல்விழி செல்வராஜன், பழங்குடி நல இயக்குனர் அண்ணாத்துரை உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை