உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியுடன் செல்லும் லாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு|Coimbatore|Smuggling mineral resources

அனுமதியுடன் செல்லும் லாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு|Coimbatore|Smuggling mineral resources

கோவை சப் கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அதில், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சோலபாளையம் கல் குவாரியில் இருந்து அனுமதியுடன் கற்கள் எடுத்துச் செல்லும் டிப்பர் லாரிகள் சோலபாளையம், தொழில்பேட்டை வழியாக வரக்கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் வாழ்வாதாரம் கேள்வி்க்குறியாகி உள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை