உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தூரிகையின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பள்ளி வளாகம்

தூரிகையின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பள்ளி வளாகம்

கோவை மாவட்டத்தில் செயல்படும் தூரிகை அறக்கட்டளை மலை மாவட்டமான நீலகிரியில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் கிராமங்களை ஒட்டி செயல்படும் அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வி மேம்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினர் மற்றும் தோட்ட தொழிலாளர் குழந்தைகள், படிக்கும் பள்ளிகளை தேடிச் சென்று, மாணவர்களுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்கள் கல்வியில் மேம்பட தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளை பொலிவுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் திட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சினேகா இருவரும் இணைந்து பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வகுப்பறைகள் மற்றும் வெளிப்பகுதிகளில் மாணவர்களை கவரும் வகையில் அறிவியல் மற்றும் கணிதம், பொது அறிவு திறன் மேம்படுத்தும் வகையிலான வண்ணமயமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

மே 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை