உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் ஹாயாக உலா வந்து பொதுமக்களுக்கு மிரட்டல் | Coimbatore | Resting wild elephant

ரோட்டில் ஹாயாக உலா வந்து பொதுமக்களுக்கு மிரட்டல் | Coimbatore | Resting wild elephant

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானை ஓகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பஜார் பகுதி மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்களை துரத்தியது. சில நேரங்களில் பகலிலும் ரோட்டில் ஹாயாக உலா வந்து வாகனங்களையும், நடந்து செல்பவர்களையும் துரத்தி வருகிறது. யானை பஜார் பகுதியை ஒட்டிய புல்வெளியில் ஹாயாக படுத்து குறட்டை விட்டு உறங்கியது. இரவில் ஆட்டம் போடும் யானை பகலில் குறட்டை விட்டு தூக்கம் போட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யானை தூங்குவதை ரசித்தனர். யானையை வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி