உரிய இழப்பீடு வேண்டி விவசாயிகள் வேதனை
நெல் புழு நோய் தாக்குதல் கண்டுகொள்ளுமா தமிழக அரசு? Desc : உரிய இழப்பீடு வேண்டி விவசாயிகள் வேதனை / Rice case worm disease/ Farmers request compensation/ Udumalai உடுமலை கொமாரலிங்கம் பகுதியில் பல ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பருவம் தப்பிய மழையால், பயிர்கள் நீரில் மூழ்கி, முதல் அறுவடை விளைச்சல் குறைந்தது. தற்போது இரண்டாவது அறுவடை நடைபெறுகிறது. நெல் புழு நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் 40 மூடை விளைச்சல் இருக்க வேண்டிய நிலத்தில் பத்து முதல் 12 மூடை மட்டுமே விளைவதாக விவசாயிகள் வேதனையடைந்தனர். அறுவடை செய்த நெல்மூடைகளை வைக்க முறையான இடமில்லாததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஏப் 23, 2025