ஒரு ரீல் தான் போட்டேன் நல்ல பிசினஸ் ஆச்சு 'பொட்டிக்' தான் கனவு
தற்போது தேர்வுக்காகவும், கேம்பஸ் இன்டர்வியூக்காகவும் தயாரான கல்விமுறையில் சற்று ஆக்கப்பூர்வமான மாறுதல்களை காணமுடிகிறது. பள்ளி முதலே நாம் அதிகம் கேட்கும் ஒரு வார்த்தையாக, எண்டர்பிரனர் ஸ்கில் உள்ளது. பல மாணவர்கள் படிக்கும் போதே தொழில்முனைவோராக கலக்கிவருகின்றனர். அதில் ஒருவர் தான் கோவை குமரகுரு கல்லுாரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி சரிதா. தையல் தொழிலை கற்றுக்கொண்டு, அதையே தன் எதிர்காலமாக இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறார் சரிதா. பிளஸ்2 விடுமுறையில், பொழுதுபோக்கிற்காக தையல் பழகிய அவருக்கு அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால், பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர்ந்து திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார். கல்லுாரி மாணவர்களுக்கும், அவர்களின் உறவுகளுக்கும் படிக்கும் போதே தைத்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார். அவருடைய முயற்சிகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.