உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருக்க இடம் கொடுத்தும் நிம்மதி இல்லை... தீ வைக்கும் மர்ம நபர்கள்!

குடியிருக்க இடம் கொடுத்தும் நிம்மதி இல்லை... தீ வைக்கும் மர்ம நபர்கள்!

கோவை மாவட்டம், பொகளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூலே கவுண்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். இக்கிராமத்தில் மின்சார வசதி இல்லாத அவல நிலை குறித்து கடந்த ஆண்டு, செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவும், கிராம மக்களின் தொடர் முயற்சியாலும், அதே ஊராட்சியில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மூன்று முறை குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை