பின்னடைவை சந்திக்கும் பிளக்ஸ் தொழில்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் வந்து விட்டால் பிளக்ஸ் தொழில் களைகட்டும். தேர்தல் பிரசாரத்துக்காக பிளக்ஸ் போர்டுகள் வைக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பிளக்ஸ் போர்டு தொழில் சுறு சுறுப்பாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்தும், தேர்தலுக்கு அரசியல் கட்சி கொடி, தோரணங்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டபின்னரும், அந்த தொழில் மெல்ல மெல்ல பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது 30 சதவீத தொழிலே நடப்பதாக கூறப்படுகிறது. நசிவடைந்து வரும் பிளக்ஸ் போர்டு தொழில் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 16, 2024