ஏழை மாணவர்களுக்கு இப்படியும் உதவி செய்யலாம்!
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏழை-எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதற்காக கல்லுாரிக்கு மாணவிகள் சிலர் தினமும் அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கான சம்பளம் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பென்சில், நோட்டு புத்தகம் போன்றவையும் அறக்கட்டளை சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு இப்படியும் உதவி செய்யலாம் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 14, 2024