உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கிடங்கால் பாதிக்கப்படும் மறுவாழ்வு மையம்

குப்பை கிடங்கால் பாதிக்கப்படும் மறுவாழ்வு மையம்

கோவையை அடுத்த கோவில்பாளையம்-சத்தி சாலையில் தனியார் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் முதுகுத் தண்டுவட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நடைபயிற்சி கொடுத்து, மறுவாழ்வளிக்கப்பட்டு பலர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த மையத்துக்கு அருகில் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகள் தரம் பிரிக்கும் மறு சுழற்சி கூடமும் செயல்படுகிறது. இதனால், குப்பையில் இருந்து வரும் துர்நாற்றம், ஈக்கள் மற்றும் அசுத்தங்களால் குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை பிரச்னைகளினால் அவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை