உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் அணையில் துார் வாரப்படுவது எப்படி? நேரடி ரிப்போர்ட்...

பில்லுார் அணையில் துார் வாரப்படுவது எப்படி? நேரடி ரிப்போர்ட்...

கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லுார் வனப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது பில்லுார் அணை. இந்த அணை இதுவரை துார் வாரப்படாததால் தற்போது அணையில் மொத்த கொள்ளளவான 100 அடியில், 57 அடிக்கு சேறும், சகதியும் நிறைந்துள்ளது. மீதி 43 அடிக்கு தான் தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அணையில் தண்ணீர் இருக்கும்போதே துார் வாரும் ஜியோ டியுப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அணையை பராமரித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்தது. இதற்காக ஆறு மற்றும் கடல் முகத்துவாரங்களில் துார் வாரும் டிரெஜ்ஜர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,387 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பில்லுார் அணையில் ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் வண்டல் மண் துார் வாரப்படுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை