உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் டோல்கேட்டில் பரபரப்பு Gomangalam Toll Plaza | Pollachi | Kovai

பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் டோல்கேட்டில் பரபரப்பு Gomangalam Toll Plaza | Pollachi | Kovai

பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் டோல்கேட்டில் பரபரப்பு Gomangalam Toll Plaza | Pollachi | Kovai கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோமங்கலம் புதூரில் புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டது. இன்று முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டை சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் தினசரி இந்த சாலையை பயன்படுத்துவதால், சுங்கக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு கேட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்தனர். டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று கோமங்கலம் புதூர், அந்தியூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு மட்டும் சுங்க கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு அளிப்பதாக டோல்கேட் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், சுங்கச்சாவடியின் செயல்பாடுகள் குறித்து சப்- கலெக்டர் ராமகிருஷ்ணசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பழனி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு டோல்கேட் ஊழியர்கள் கேட்டனர். கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி பஸ் டிரைவர் விஷ்வா மறுத்துள்ளார். அங்கு ஆய்வில் இருந்த சார் ஆட்சியரிடமும் வாக்குவாதம் செய்தார். இதனால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், விஷ்வாவின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய பின், எச்சரித்து அனுப்பி வைத்தனர். தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ராஜா கூறியதாவது: தனியார் பஸ்கள் ஏற்கனவே நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. காலம் காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் தான் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

ஜூலை 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை