பசுமை மற்றும் சுற்றுப்புறத் துாய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு | Green and Clean Marathon
கோவை தி அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி மற்றும் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் கிரீன் அண்ட் கிளீன் வடவள்ளி மராத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதை வடவள்ளியில் உள்ள கோவை ஹூண்டாய் ஷோரூம் துணைத் தலைவர் அபுதாகீர், அத்யாயனா பள்ளி தாளாளர் ஆனந்த கிருஷ்ணன் துவக்கி வைத்தனர். இதில் 2 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக மராத்தான் நடத்தப்பட்டது. 10 கிலோ மீட்டர் ஓட்டம் அத்யாயனா பள்ளியில் இருந்தும், 2 கிலோ மீட்டர் ஓட்டம் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்- மைதானத்தில் இருந்து துவங்கி அத்யாயனா பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 6 வயது முதல் 50 வயதுக்கு மேற்பட்ட ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் டி சர்ட், பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.