10 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Handball tournament| sports | covai
10 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு| Handball tournament| sports | covai கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஹேண்ட்பால் போட்டிகள் துவங்கியது. உடற் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் மூன்று நாள் நடைபெறும். போட்டியில், மாருதி உடற்கல்வியியல் கல்லூரி, ஒய்.எம்.சி.ஏ, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றனர். போட்டி லீக் முறையில் நடத்தப்படுகிறது. முதல் நாள் இறுதியில் ஒய்.எம்.சி.ஏ அணி மற்றும் சிவந்தி ஆதித்தனார் உடல் கல்வியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பால் பேட்மிட்டன் போட்டிகள் நடந்தது. ஏற்பாடுகளை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.