நோய் தீர்க்கும் ஆஞ்சநேயர் பிரமிட் தியான மண்டபம்
கோவை-பொள்ளாச்சி சாலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஆஞ்சநேயர் கோவில் மிகவும் அமைதியான கோவில் என்று பெயர் பெற்றது. ஆஞ்சநேயர் பஜனை பாடும் வகையில் இங்கு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இங்கு பிரமிட் வடிவில் தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனுள் அமர்ந்து ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்தால், நம் உடல் நோய்கள் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோவையில் உள்ள எந்த கோவிலிலும் இது போன்ற பிரமிட் வடிவிலான தியான மண்டபம் இல்லை என்பது மற்றொரு சிறப்பு. இத்தகைய சிறப்பம்சங்கள் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.
ஜன 19, 2024