உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor

உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டியது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. சுற்றுலா ஸ்தலமான லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் மழையின் காரணமாக இரு மரங்கள் அவ்வழியாக வந்த கார்கள் மீது விழுந்தன. இதில் இரு கார்கள் சேதமடைந்தது. எனினும் கார்களில் இருந்த பெங்களூரு சுற்றுலாப் பயணிகள் மற்றும் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு துறையினர் அங்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

மே 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை