கூடைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் பெண்களின் போராட்டம் | women empowerment | Coimbatore | Humaninterest
சட்டென்று சாலைகளை கடந்து செல்லும் கார்களுக்கு, கணநேர கடிவாளமிடுகிறது டிராபிக் சிக்னல்கள். அந்த நொடிப்பொழுதில் நம்மை நாடி வரும் மனிதர்களும் நமது கவனம் ஈர்க்கும் மனிதர்களும் ஏராளம் ஏராளம்... அப்படி கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் கவனம் ஈர்த்தவர்கள் தான், சகோதரிகள் கஸ்தூரியும், மாலதியும். மூன்று தலைமுறைகளாக கூடை பின்னும் தொழிலை செய்து வருகின்றனர். முந்தைய காலத்தில் இவர்களின் தலைமுறை செய்த ஓலைக்கொட்டானின் அப்டேடட் வெர்சன் தான் இன்று இவர்கள் விற்கும் வண்ண வண்ண ஒயர் கூடைகள். நம்ம தொழில்தான் நமக்கு உயர்வு என்று தங்கை மாலதி கூறிய வார்த்தைகள் இதுபோன்ற பலருக்கும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. அக்கா கஸ்தூரிக்கு இத்தொழிலில் 35 ஆண்டுகள் அனுபவம். இவர்களின் கைப்பின்னல் கூடைகள் சுற்றுவட்டார கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை அரசு சலுகைகள் ஏதும் கிடைக்கவில்லை. சொந்த கடை திறக்க வேண்டும் என்பது தான் இவர்களின் பெரிய ஆசை. வீடு வீடாக சென்று விற்று வந்தனர். இன்று வாடிக்கையாளர்களே தேடி வந்து வாங்குகின்றனர். 350 ரூபா வரை விற்கப்படும் கூடையை 200 ரூபாய்க்கு விற்பதாக தெரிவித்தனர் . கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற நாமக்கல் கவிஞரின் வாக்கினை மெய்ப்பிக்கும் இவர்கள் வெறுங்கை என்பது மூடத்தனம்