கோவையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை 5 செஸ் போட்டிகள்
கோவையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை 5 செஸ் போட்டிகள் | Coimbatore | International Master title Chess tournaments begin தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான ஐந்து தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க போட்டிகள் 2025-26 கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் கோலாகலமாக துவங்கியது. இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22 வரை நடக்கவுள்ளது. தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் அனந்தராம், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவ 14, 2025