ஆக்ரோஷமாக ஆடும் கல்லுாரி மாணவர்கள் | Kabaddi Tornament | Bharathiar University | Covai
ஆக்ரோஷமாக ஆடும் கல்லுாரி மாணவர்கள் / Kabaddi Tornament / Bharathiar University / Covai கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான ‛ஏ-மண்டல கபடி போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. 20 அணிகள் பங்கேற்ற போட்டிகளை பல்கலை பதிவாளர் ராஜவேல் மற்றும் நிதி அலுவலர் முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நாக் அவுட் முறையில் ஆண்களுக்கான போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் எஸ்.என்.எஸ். அணியானது 30-6 என்ற புள்ளிகளில் கூடலுார் அரசு கலைக்கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து கோவை எஸ்.ஆர்.எம்.வி. அணி, 44-21 என்ற புள்ளிகளில் எஸ்.ஆர்., கலைக் கல்லுாரி அணியை வென்றது. மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லுாரி அணி 28-23 என்ற புள்ளிகளில் சுகுணா கலைக் கல்லுாரி அணியையும், காரமடை ஸ்ரீ குமரன் கல்லுாரி அணி 38-27 என்ற புள்ளிகளில் கே.ஜி., கல்லுாரி அணியையும், கொங்குநாடு கலைக் கல்லுாரி அணி, 29-14 என்ற புள்ளிகளில் யு.ஐ.டி., அணியையும் வென்றன. பயனீர் கலை அறிவியல் கல்லுாரி அணி 28-23 என்ற புள்ளகளில் ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி அணியையும், ஸ்ரீ குமரன் கல்லுாரி அணி, 41-31 என்ற புள்ளிகளில் கொங்குநாடு கல்லுாரி அணியையும், என்.ஜி.பி., அணியானது, 34-7 என்ற புள்ளிகளில் ரத்தினம் கல்லுாரி அணியை வென்றது. பாரதியார் பல்கலை அணி 32-15 என்ற புள்ளிகளில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, 33-24 என்ற புள்ளகளில் ஸ்ரீ குமரன் கல்லுாரி அணியையும் வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.