உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்ரோஷமாக ஆடும் கல்லூரி மாணவர்கள் | Kabaddi Tornament | Bharathiar University | Covai

ஆக்ரோஷமாக ஆடும் கல்லூரி மாணவர்கள் | Kabaddi Tornament | Bharathiar University | Covai

ஆக்ரோஷமாக ஆடும் கல்லூரி மாணவர்கள் / Kabaddi Tornament / Bharathiar University / Covai கோவை பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல கபடி போட்டி நடைபெறுகிறது போட்டியில் 8 அணிகள் பங்கேற்றனர். போட்டிகளை பல்கலை வேதியியல் துறை தலைவர் இளஞ்செழியன் மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர் அண்ணாதுரை துவக்கி வைத்தனர். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல் போட்டியில் ஸ்ரீ ராமு கல்லூரி அணி அணி 48-44 என்ற புள்ளிகளில் டாக்டர் என்.ஜி.பி. அணியை வென்றது. தொடர்ந்து காங்கேயம் அரசு கல்லூரி அணி, 39-27 என்ற புள்ளிகளில் கே.பி.ஆர். கலைக் கல்லுாரி அணியை வென்றது. பாரதியார் பல்கலை அணி 27-26 என்ற புள்ளிகளில் ரத்தினம் கல்லுாரி அணியையும், ஈரோடு அரசு கலை கல்லுாரி அணி 32-24 என்ற புள்ளிகளில் எஸ்.ஆர்.எஸ். கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றது. வெற்றி பெற்ற நான்கு அணிகளுக்கு இடையே ஆன போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகிறது. உடற்கல்வித்துறை பேராசிரியர் குமரேசன் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ