உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி | Kabadi tournament | pandalur

தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி | Kabadi tournament | pandalur

டிஸ்க்: தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி / Kabadi tournament / pandalur பந்தலூர் அருகே உப்பட்டியில், இளம் புயல் விளையாட்டு குழு, அத்திமாநகர் மற்றும் உப்பட்டி நண்பர்கள் சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான மின்னொளி கபாடி போட்டியை நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான போட்டி கடந்த 19 மற்றும் இருபதாம் தேதிகளில் உப்பட்டி எம்.எஸ்.எஸ். மைதானத்தில் நடந்தது. ராமர் வரவேற்றார். விழா ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், தங்கதுரை முன்னிலை வகித்தனர். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிக்காட்டினர். இதில் கோவை டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணி முதலிடம், அத்திக்குன்னா டவுன் அணை 2- ம் இடம், திருச்சி எஸ்.எம் பள்ளி அணி 3-ம் இடம், இளம் புயல் ஏ அணி 4-ம் இடம் பிடித்தனர். முதல் பரிசு கோப்பை வக்கீல் கணேசன் மற்றும் 1 லட்சம் ரூபாய் பண முடிப்பு நீலகிரி மாவட்ட ஒப்பந்தாரர் சங்க நிர்வாகி ராயின் வழங்கினர். இரண்டாம் பரிசு கோப்பை ஐயப்பன் மற்றும் மணிகண்டன், 50 ஆயிரம் ரூபாய் பணம் முடிப்பு மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் வாசிம்ராஜா வழங்கினர். மூன்றாம் பரிசுக்கான கோப்பை மருந்தாளுனர் ராமநாதன் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர் ஜெயலட்சுமி வழங்கினர். பணமுடிப்பு 30 ஆயிரம் ரூபாயினை நாகேந்திரன் வழங்கினார். நான்காம் பரிசுக்கான கோப்பை மணியபிள்ளை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பண முடிப்பு கவுன்சிலர் முரளிதரன், வினோத் ஆகியோர் வழங்கினர். மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறந்த அணிக்கான பரிசு மற்றும் பண முடிப்புகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் எம்.எல்.ஏ. ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, தி.மு.க. நகரசெயலாளர் சேகர், வக்கீல் கணேசன், எம்.எஸ்.எஸ். பள்ளி தாளாலர் ஆலி, காங்கமுத்து, ஞானவேந்தன் உள்ளிட்ட விளையாட்டு குழுவினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி