குளு குளு குளியல் | குதுாகலத்தில் கல்யாணி யானை
கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. பாகன் ரவி பராமரித்து வருகிறார். கல்யாணி யானையை பரிசோதிக்கும் கால்நடை மருத்துவர் ராஜாங்கம் வெயில் காலத்திற்கு ஏற்ற டிப்ஸ் குறித்து கூறியதாவது: கோவையில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கல்யாணி யானை இந்த கோடை வெப்பத்தை தணித்துக் கொள்ள குளியல் தொட்டியில் தினமும் இரண்டு முறை குளிக்க வைக்கப்படுகிறது. நீச்சல் குளத்தில் தண்ணீரை பார்த்ததும் குழந்தை விளையாடுவது போல் கல்யாணி யானை படுத்து, உருண்டு, ஆனந்த குளியல் போடுகிறது. தண்ணீர் நிறைந்த பழங்கள் மற்றும் சத்துள்ள பழங்கள் கொடுக்க வேண்டும்.பேரிச்சம்பழம் மற்றும் தர்பூசணி இவை இரண்டையும் கல்யாணி யானை மிகவும் விரும்பி ருசித்து சாப்பிடும். அதனால் அவற்றையும் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்யாணி யானை குடிப்பதற்கு ஒரு வேளைக்கு 80 லிட்டர் தண்ணீர் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.