கட்டட மேற்கூரை கான்கிரிட்டில் கவனம் வேண்டும் | கனவு இல்லம் | பகுதி - 5 | Roof Concrete
கட்டடம் கட்டுவதில் மேற்கூரை போடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும். அது பாதி கட்டடம் முடிந்தது போன்றது. அதனால் தான் அந்த நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்வார்கள். கட்டடத்தின் மேற்கூரை கான்கிரிட் போடுவதற்கு முன்பும், கான்கிரிட் போடும் போதும், முடிந்த பின்னரும் நன்கு கவனிக்க வேண்டும்.ரெடிமேடு கான்கிரிட் மிக்சிங் போட்ட பின்னர் 30 நிமிடங்களிலேயே கியூரிங் பணியை தொடங்க வேண்டும். இல்லையென்றால் விரிசல் உண்டாகி விடும். மேலும் கான்கிரிட்டில் சேர்க்கப்படும் தண்ணீரும் குடிக்கும் தண்ணீரை விட நன்றாக இருக்க வேண்டும். உப்பு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. கட்டடத்தின் கான்கிரிட் மேற்கூரை போடுவதில் உள்ள முக்கியத்துவம் மற்றும் கவனம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.