உயிர் பலியை தடுக்க உயர்மட்ட பாலம் அமையுமா?
கோவையை அடுத்த கணுவாய் தடுப்பணைக்கு சுற்றுவட்டாரங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த தடுப்பணை சரியாக பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தடுப்பணை அருகில் உள்ள சாலை பாதுகாப்பானதாக இல்லை. மழைக்காலங்களில் தடுப்பணையில் வரும் தண்ணீரில் வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த தடுப்பணை அருகில் உள்ள சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணுவாய் தடுப்பணையை பராமரிப்பது குறித்தும், உயர் மட்ட பாலம் அமைப்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 07, 2024