மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம்... 20 ரூபாயிலும் விபத்து காப்பீட்டு திட்டம் இருக்குங்க!
பரபரப்பான வாழ்க்கையில், பல அசாதாரண சம்பவங்களை நாம் எதிர்கொள்கிறோம். அதை சமாளிக்கும் வகையில் பெரும்பாலானவர்கள் தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய அரசு சார்பிலும் விபத்து காப்பீடு திட்டம் அளிக்கப்படுகிறது. மிகவும் குறைந்த தொகையான 20 ரூபாயில் விபத்து காப்பீட்டு திட்டம் வங்கியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர ஆயுள் காப்பீட்டு திட்டம், பென்சன் திட்டம் உள்ளிட்ட பல காப்பீட்டு திட்டங்கள் பொது மக்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் சேருவது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.