உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விறுவிறுப்பான ஆட்டம் | Karate competition | Kovai

விறுவிறுப்பான ஆட்டம் | Karate competition | Kovai

கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப்-2024 போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. கராத்தே கோயம்புத்துார் அசோசியேஷன் மற்றும் கல்லுாரியின் உடற்கல்வி துறை இணைந்து நடத்திய இப்போட்டியில் 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கட்டா மற்றும் குமிட்டி போட்டிகளில் 6 முதல் 22 வயது பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் பிரியா துவக்கி வைத்தார். வீரர், வீராங்கனைகள் என தலா 20 பிரிவுகளில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அசோசியேஷன் தலைவர் வீரமணி, செயலாளர் சினோத், இணை செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை