'தினமலர்' கொலு விசிட் | வாசகியர்களுக்கு பரிசு | Coimbatore
தினமலர் நாளிதழ், அதிசியா நிறுவனம் இணைந்து, நவராத்திரி கொலு விசிட் கடந்த, அக்., 3 ம் தேதி முதல் அக்., 11ம் தேதி கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தின. இதில், கோவையின், 300 க்கும் மேற்பட்ட வாசகர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக கொலு அமைத்தவர்களை தேர்வு கமிட்டி தேர்வு செய்தது. இவர்களுக்கு பரிசளிப்பு விழா கோவை அத்திப்பாளையத்தில் உள்ள அதிசியா - தி அட்ரஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள காலையில் இருந்தே ஏராளமான வாசகர்கள் திரண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குனர் வைஷ்ணவி, அதிசியா இயக்குனர் மணிகண்டன், ஐயப்பா நெய் நிர்வாக இயக்குனர் கிரீஷன், கோவில் கொங்கிலாச்சான் அப்பண்ணசாமி சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார்கள். தொடர்ந்து சிறப்பாக கொலு அமைத்திருந்தவர்களுக்கு டி.வி., வாஷிங்மெஷின், பிரிட்ஜ் மற்றும், 40 பேருக்கு மிக்ஸி ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.