/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நிலத்தடி நீரை பாதிக்கும் நஞ்சு... குட்டையில் கொட்டிய கல் நெஞ்சு
நிலத்தடி நீரை பாதிக்கும் நஞ்சு... குட்டையில் கொட்டிய கல் நெஞ்சு
கோவை மாவட்டம் சூலுார் ஊராட்சி ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையத்தில் உள்ள குட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு துார் வாரப்பட்டது. இந்த குட்டையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு சுற்று வட்டாரங்களில் விவசாயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த குட்டையில் தொழிற்சாலை எண்ணெய் கொட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயில் கொட்ட பயன்படுத்திய லாரி சிறை பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குட்டையில் உள்ள தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 12, 2025