டன் விளையாடும் வீரர், வீராங்கனை | district level basketball tournament | covai
டன் விளையாடும் வீரர், வீராங்கனை / district level basketball tournament / covai கோவையில் மாவட்ட அளவிலான நான்காவது ஸ்ரீ நவகோடி நினைவு டிராபி கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் துவங்கியது. இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஏழு அணிகள் பங்கேற்றன. தவிர 16 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஒன்பது அணிகள், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 17 அணிகள், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் 12 அணிகள் பங்கேற்றன. வரும் 22ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. காலை துவங்கிய 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான முதல் போட்டியில் எஸ்.வி.ஜி.வி. அணியும், ஒய்.எம்.சி.ஏ. அணியும் மோதின. சுறுசுறுப்பாக விளையாடிய ஒய்.எம்.சி.ஏ., மாணவர்கள், 54-47 என்ற புள்ளிகளில் எஸ்.வி.ஜி.வி., அணியை வென்றனர். அதிக பட்சமாக எஸ்.வி.ஜி.வி., வீரர் வியாஸ் 17 புள்ளிகளும், ஒய்.எம்.சி.ஏ., வீரர் தரண் 16 புள்ளிகளும் எடுத்தனர். 13 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான முதல் போட்டியில் பாரதி அணியும், எஸ்.வி.ஜி.வி., அணியும் மோதின. இதில் எஸ்.வி.ஜி.வி., அணி 47-22 என்ற புள்ளிகளில் பாரதி அணியை வென்றது. பாரதி அணி வீராங்கனை அனோகா ஏழு புள்ளிகளும், எஸ்.வி.ஜி.வி., வீராங்கனை அக்சிதா, 13 புள்ளிகளும் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கிறது.