உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தகம் படிக்கும் அனுபவம் டிஜிட்டலில் கிடைக்காது | Books | Home Library | Coimbatore

புத்தகம் படிக்கும் அனுபவம் டிஜிட்டலில் கிடைக்காது | Books | Home Library | Coimbatore

கோவையில் உள்ள தனியார் நுாலகத்தில் நுாலகராக இருப்பவர் தங்கம் ஆனந்தகுமார். இவர் தனது வீட்டிலும் நுாலகம் வைத்துள்ளார். இதில் அனைத்து எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், அறிஞர்கள் என பல தரப்பட்டவர்கள் எழுதிய புத்தகங்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இதிகாசங்களும் இடம் பெற்றுள்ளன. இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. அந்த நுாலகம் வெளியிட்ட யாழ்ப்பாண அகராதி என்ற புத்தகமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நுாலகர் தங்கம் ஆனந்தகுமார் கூறுகையில், புத்தகம் படிப்பது தவம் செய்வது மாதிரி. அதை படிக்கும் போது வேறு சிந்தனைகள் வராது. வேண்டாத எண்ணங்கள் வருவதில்லை. புத்தகம் படிப்பதின் வாயிலாக நம்மை நாம் செம்மை படுத்திக்கொள்ளலாம். தற்போது டிஜிட்டலில் படிப்பது பிரபலமாகி வருகிறது. ஆனால், புத்தகம் படிக்கும் அனுபவம் டிஜிட்டலில் கிடைக்காது. வாசிக்கும் பழக்கம் இப்போது மக்களிடம் குறைந்து வருகிறது. எனவே புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பெற்றோர் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும் என்றார். இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை