கோவையில் அமையும் சரக்கு முனைய வளாகம்: 219 ஏக்கரில் உருவாகிறது
இந்திய தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ. 50 ஆயிரம் கோடி செலவில் இந்தியா முழுவதும் 35 இடங்களில் சரக்கு முனைய வளாகம் அமைக்கிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அருகே கரவழி மாதப்பூர் என்ற இடத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான சரக்கு முனைய வளாகம் அமைக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில். கோவை மாவட்டத்தில் இருகூரும், செட்டிப்பாளையமும் சரக்கு வழி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல ஆயிரம் டன் சரக்குகளை கையாள வேண்டுமென்றால் அதற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டும். இதற்காக கோவை மாவட்டம் சூலுார் அருகே உள்ள கரவழி மாதப்பூர் என்ற பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இருகூரில் ரயில் நிலையமும், சித்ரா பகுதியில் கோவை விமான நிலையமும் மற்றும் அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் எல் அண்டி பைபாஸ் சாலையும் அருகில் அமைந்துள்ளன. இதனால் ரயில், விமானம், சாலை மார்க்கமாக கொண்டு வரப்படும் சரக்குகளை கரவழி மாதப்பூருக்கு கொண்டு வந்து கையாள்வது எளிது. சரக்குகளை அனுப்பும் செலவும் குறைகிறது. சரக்கு முனைய வளாகம் அமைவதின் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறும் என்பது உறுதி. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.