நரபலி கொடுக்கும் எண்ணம் ஏன் வருகிறது? பாதிப்பது யார்? மனமே நலமா? பகுதி- 33 | Dr.Srinivasan
சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மது பிரியரை நரபலிக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்ககள் ஏன் நடக்கிறது. இதை செய்கிறவர்கள் யார்? பாதிக்கப்படுபவர்கள் யார்?. மூட நம்பிக்கை உள்ளவர்கள், பேராசை உள்ளவர்கள், இது போன்று செய்தால் பெரிய புதையல் கிடைக்கும் என்று அவர்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். இந்த நம்பிக்கை எங்கிருந்து வருகிறது. உழைப்பு இல்லாமல் அதிக பொருள் நம்மை வந்து அடையும் என்ற நம்பிக்கை தான். இத்தகைய நம்பிக்கை உள்ளவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதால் தான் நரபலி சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு யார் சிக்குகிறார்கள் என்றால் மது போதைக்கு அடிமையானவர்கள் தான் இதற்கு பலியாகிறார்கள். நரபலி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. எனவே மது, போதை பழக்கம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நரபலி கொடுக்கும் எண்ணம் ஏன் வருகிறது?அதற்கு ஆளாவது யார்? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.