/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாங்காய் விலையை விட மருந்து அடிக்கும் செலவு அதிகம் | விவசாயிகள் வேதனை
மாங்காய் விலையை விட மருந்து அடிக்கும் செலவு அதிகம் | விவசாயிகள் வேதனை
கோவைக்கு மாங்காய் சீசன் முன்கூட்டியே வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது குறிப்பிட்ட சீசன்களில் தான் மாங்காய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆண்டு முழுவதுமே மாங்காய் கிடைக்கிறது. கோவையிலிருந்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாந்தோப்புகளுக்கு தற்போது மருந்து அடிக்கும் செலவு அதிகமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இதனால் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை குறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு மாம்பழ சீசன் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 28, 2025