தாவரவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வேண்டும்
இயற்கை சார்ந்து நாம் சந்திக்கக்கூடிய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது தாவரங்களில்தான் உள்ளது. ஆனால், இதர படிப்புகளை போன்று தாவரவியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மரங்கள், தாவரங்களில் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. கேன்சர் உள்ளிட்ட கொடிய வியாதிகளைக் கூட கட்டுப்படுத்தக்கூடிய திறன் தாவரங்களில் உள்ளன. ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் உள்ளன. சூழலைக் கடந்து இது போன்ற மரங்கள் எவ்வாறு இத்தனை ஆண்டு காலங்கள் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய வேண்டும். வனப்பகுதிகளில், வெளிநாட்டு தாவரங்கள் மரங்கள் பரவுவது ஆபத்தானது. விழிப்புணர்வு என்ற பெயரில், ஜப்பானிய முறை என்று கூறி, சிலர், வெளிநாட்டு மரங்களை நடுகின்றனர். இது மோசமான நடவடிக்கையாகும். அறிவியல் ஆராய்ச்சியாளருக்கும், தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இஸ்ரோவில் சாதாரண மெக்கானிக் இருந்தால் கூட அவர்களின் மீதான பார்வை வேறு. ஆனால், தாவரவியல் ஆராய்ச்சியாளரை மதிப்பு மிக்க கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதில்லை. அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறுகிறார் தாவரவியல் ஆராய்ச்சியாளர் மாணிக்கம். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.